close
Choose your channels

19 வருடங்களுக்கு பின் பிரசன்னாவுடன் ஜோடி சேரும் நடிகை: ரசிகர்கள் வாழ்த்து!

Friday, February 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

19 வருடத்திற்கு பின் நடிகர் பிரசன்னாவுடன் ஜோடி சேரும் நடிகைக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘ஃபைவ் ஸ்டார்’. இந்த படத்தில் பிரசன்னா மற்றும் கனிகா நாயகன், நாயகிகளாக நடித்திருந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் பிரசன்னா மற்றும் கனிகா இணைந்துள்ளனர். ஓடிடி ஒன்றுக்காக எடுக்கப்படும் திரைப்படத்தில் பிரசன்னா மற்றும் கனிகா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து நடிகை கனிகா தனது சமூக வலைத்தளத்தில், ‘19 ஆண்டுக்கு பிறகு எனது முதல் பட நாயகன் பிரசன்னாவுடன் மீண்டும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை நான் இப்போது உணர்கிறேன். நடிகர் பிரசன்னாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.