close
Choose your channels

'கோமாளி' வெற்றிப்பட நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, September 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிய ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலையும் வாரி குவித்தது.

இந்த நிலையில் தற்போது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படமான ‘பப்பி’ என்ற படத்தின் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ’பப்பி’ திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருண், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, ஆர்ஜே விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முரட்டு சிங்கள் என்பவர் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க காமெடி அம்சங்கள் பொருந்திய இந்த படம் ’கோமாளி’ படம் போலவே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.