close
Choose your channels

மகேஷ்பாபு, பிரபாஸை அடுத்து விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

Friday, February 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் மகேஷ்பாபு உள்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தில் அவர் ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான ரித்திக் ரோஷன், அக்சயகுமார், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு, உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே தற்போது பிரபாஸ் நடித்து வரும் படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் அகில் அக்கினி ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் சுதா கொங்காரா இயக்கவுள்ள ’தளபதி 65’ படத்தில் நாயகியாக பூஜா நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.