close
Choose your channels

'சூரரை போற்று', 'ஜெய்பீம்' படங்களை அடுத்து அமேசானுக்கு செல்கிறதா 'விருமன்'?

Saturday, January 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்து தயாரித்த ‘சூரரைப்போற்று’ மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேரடியாக அமேசான் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகிவரும் ’விருமன்’ திரைப்படமும் அமேசானுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி, அதிதிஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’விருமன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என்றும் அதன்பின் இரண்டு அல்லது மூன்று வாரம் கழித்தே அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சூரரைப்போற்று மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய சூர்யாவின் 2 தயாரிப்பு படங்களும் அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியான ’விருமன்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸான பின் அமேசானில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.