close
Choose your channels

'தளபதி 62' படம் குறித்த முக்கிய தகவல்

Thursday, December 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கவுள்ள 62வது படமான 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக இணையதளங்களில் வெளியாகி டிரெண்ட் ஆகிவருகிறது

அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் புதிய தகவலின்படி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படம் 'கத்தி' படம் போலவே விவசாயிகளின் முக்கிய பிரச்சனையை அலசும் படம் என்றும், இந்த படத்திற்கு ஏற்கனவே வெளிவந்து கொண்டிருக்கும் தகவலின்படி 'ஏர்' அல்லது 'கலப்பை' என்ற டைட்டில் வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்கள் நடிக்கவிருப்பதாகவும், விஜய்க்கு ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

இந்த படம் இவ்வருட தீபாவளி தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.