close
Choose your channels

தமன்னாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Thursday, December 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகை தமன்னா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz தனது மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு 'கேடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகையாக உள்ளார் தமன்னா

கேடி, கல்லூரி போன்ற ஆரம்பகட்ட படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றாலும் தனுஷுடன் அவர் நடித்த 'படிக்காதவன்' மற்றும் சூர்யாவுடன் நடித்த 'அயன்' ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைத்தது. தமன்னாவின் தனித்துவ நடிப்பை வெளிக்காட்டிய 'ஆனந்த தாண்டவம், 'கண்டேன் காதலை' ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தன

அஜித்துடன் நடித்த 'வீரம்', கார்த்தியுடன் நடித்த 'பையா', சிறுத்தை, தோழா, ஜெயம் ரவியுடன் நடித்த 'தில்லாலங்கடி, ஆகிய படங்கள் தமன்னாவின் வெற்றி படங்களில் சில. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி' படத்தில் தமன்னா முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். அதேபோல் சமீபத்தில் வெளிவந்த தர்மதுரை படமும் தமன்னாவின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகும்

தற்போது தமன்னா விக்ரமுடன் 'ஸ்கெட்ச்', மற்றும் குவீன் ரீமேக் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதேபோல் இன்னும் பல படங்களில் நடித்து புகழும் விருதும் பெற்று குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு நமது வாழ்த்துக்களை மீண்டும் கூறிக்கொள்கிறோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.