close
Choose your channels

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Friday, April 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்த நிலையில் அவர் சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் உதய்சங்கர் ஹீரோவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாகவும் நடிக்கவுள்ளனர்

குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் குறித்த திரைப்படமான இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு படக்குழுவினர் 'மிஸ்மேட்ச்' (MISMATCH) என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.