அஜித்துடன் இணையும் ஆண்ட்ரியா
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் 'விவேகம்' படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆண்ட்ரியா நடிப்பில் ராம் இயக்கிய 'தரமணி' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதோடு, ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் சற்று முன் சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ரியா, வசந்த், அழகம்பெருமாள் மற்றும் சிறப்பு தோற்றத்தில் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு வெளியான 'தங்க மீன்கள்' படத்திற்கு பின்னர் ராம் இயக்கத்தில் வெளியாகும் அடுத்த படம் தான் 'தரமணி' என்பது குறிப்பிடத்தக்கது.