close
Choose your channels

அச்சு அசலாக சென்னை அண்ணா சாலை: 'ஏகே 61' பட செட் வீடியோ லீக்!

Tuesday, July 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஏகே 61’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு வங்கிக் கொள்ளை குறித்த காட்சிகள் படமாக்கப்பட்டது என்றும், அதற்காக பெரும் பொருட் செலவில் சென்னை அண்ணாசாலை போன்றே அச்சு அசலாக செட் போடப்பட்டதாக செய்திகள் வெளியானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த செட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள முக்கிய வங்கி போலவே அச்சு அசலாக செட் போடப்பட்டுள்ளது என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இந்த வங்கி மட்டுமின்றி சென்னை அண்ணா சாலையில் உள்ள முக்கிய இடங்களை அப்படியே திரையில் காண்பிக்க பட குழுவினர் தீவிர முயற்சி எடுத்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெற உள்ளதாகவும், இந்தப் படப்பிடிப்பில் அஜீத், மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.