close
Choose your channels

பிப்ரவரியில் எலும்பு முறிவு.. ஜூனில் வேற லெவலில் வொர்க்-அவுட்.. அஜித் நாயகியின் தன்னம்பிக்கை..!

Friday, June 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பிப்ரவரி மாதம் காலில் எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வந்த அஜித் பட நடிகை ஒருவர் நான்கே மாதங்களில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்ததோடு தற்போது காலுக்கு கடுமையான வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அஜித்தின் நடித்த ’வரலாறு’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் தற்போது ’எதிர்நீச்சல்’ உள்பட ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை கனிகா.

இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கனிகாவுக்கு கணுக்காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வந்த நிலையில் படிப்படியாக உடற்பயிற்சியும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நான்கே மாதங்களில் அவர் முழு குணம் அடைந்து எலும்பு முறிவு ஏற்பட்ட அதே காலில் தற்போது கடினமான வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து கனிகாவின் தன்னம்பிக்கையை பாராட்டி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.