close
Choose your channels

பெற்றோருடன் அஜித்: வைரலாகும் புகைப்படம்!

Monday, November 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தான் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஜீத் குறித்த ஹேஷ்டேக் தினமும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது அஜித், தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்

ஒரு கோவிலில் இருந்து அஜித் தனது பெற்றோருடன் வெளியே வருவது போன்று இருக்கும் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருவதால் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’வலிமை’ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சுதாகொங்காராவின் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.