close
Choose your channels

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா? பட்ஜெட் ரூ.200 கோடிக்கும் மேல்?

Wednesday, February 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 62’ படத்தின் பட்ஜெட்டும் ரூ.200 கோடிக்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ’ஏகே 62’ படத்தை விக்னேஷ் இவனுக்கு பதில் வேறொரு இயக்குனர் இயக்குவார் என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மகழ் திருமேனி கூறிய கதை அஜித்துக்கு பிடித்து விட்டதாகவும் இதனை அடுத்து ’ஏகே 62’ படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடிக்கு மேல் அதிகம் என்றும் கூறப்படுகிறது. மேலும் குறுகிய கால தயாரிப்பாக இந்த படம் இருக்கும் என்றும் வரும் தீபாவளி தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அஜித்தின் 63வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.