close
Choose your channels

'தல 57' பாடல்கள் மற்றும் இசை பற்றி அனிருத் தகவல்

Tuesday, October 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து வரும் 'தல 57' படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை அனிருத் கம்போஸ் செய்து முடித்துவிட்ட செய்தியை அவரே சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது அவர் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். .

இந்த படம் சர்வதேச தரத்தில் உருவாகி வருவதால் இந்த படத்திற்கு இயக்குனர் சிவாவின் விருப்பத்திற்கு இணங்க ஜேம்ஸ்பாண்ட் பாணியில் இசையமைத்து வருவதாகவும், இந்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ஜேம்ஸ்பாண்ட் படத்தை பார்ப்போது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும் 2017 கோடை விடுமுறைக் காலத்தில் `தல 57` வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார்.

அனிருத்தின் இந்த தகவலை அடுத்து இந்த படத்திற்கு இந்த படத்தின் ஆல்பத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.