close
Choose your channels

நாச்சியார் தெலுங்கு ரீமேக்கில் நம்பர் ஒன் நடிகை?

Saturday, March 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படம் மூன்றாவது வாரமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் 'நாச்சியார்' திரைப்படம் இன்னும் பெருவாரியான திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்த நிலையில் 'நாச்சியார்' படத்தின் வெற்றியை கவனித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர், இந்த படத்தை தெலுங்கில் டப் செய்ய முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கினர். ஆனால் இந்த படத்தை டப் செய்வதைவிட தெலுங்கில் ரீமேக் செய்வது நல்லது என்று இயக்குனர் பாலா ஆலோசனை கூறியதாகவும், ஜோதிகாவின் வேடத்தில் அனுஷ்கா பொருத்தமாக இருப்பார் என்று அவர் பரிந்துரை செய்தததாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் உள்ள அனுஷ்கா, இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால், அந்த கம்பீர போலீஸ் கேரக்டர் அவருக்கு மிகப்பொருத்தமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அனுஷ்கா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.