close
Choose your channels

கார்த்தியின் மெகா பட்ஜெட் படத்தின் முக்கிய அறிவிப்பு

Saturday, March 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று'; திரைப்படம் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த நிலையில் மீண்டும் கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில்  கார்த்தி, ரகுல் பிரீத்சிங், பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , RJ விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா மற்றும் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் அஜத் ரவிசங்கர் இயக்கத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் புரிகின்றனர்.

இமயமலை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட்   மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 8ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.