close
Choose your channels

சிவகார்த்திகேயனின் மெகா டீமுக்கு வாழ்த்து சொன்ன 'தளபதி 63' தயாரிப்பாளர்

Friday, March 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் லைகா ஆகியோர் இணையும் மெகா டீமின் படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி தமிழ்த்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமான சிவகார்த்திகேயன் தற்போது லைகாவின் படத்திலும் நடிக்கவுள்ளதால் ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்க ஒப்பந்தமான சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் டீமுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது டுவிட்டின் கமெண்ட்டில் விஜய் ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் இணையும் புதிய திரைப்படம் வரும் ஜூலையில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்பதும் இந்த படம் அடுத்த வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.