close
Choose your channels

அருண்விஜய்யின் 'தடம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, January 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிய நடிகர் அருண்விஜய் நடித்து முடித்துள்ள 'தடம்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ரிலிஸ் உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், இந்த படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க' படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இரண்டு வேடங்களில் அருண்விஜய் நடித்துள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையில், கோபிநாத் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இந்தர்குமார் தயாரித்துள்ளார்.

மேலும் அருண்விஜய் தற்போது பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ', மற்றும் பாக்ஸர், வா டீல் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.