close
Choose your channels

ரஜினிக்கு மறைமுக ஆதரவு கொடுத்த கமல்!

Friday, January 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் அவர் மீது ஒருசிலர் வைக்கும் முக்கிய விமர்சனம் 'ரஜினிகாந்த் தமிழர் இல்லை, தமிழர் அல்லாத ஒருவர் தமிழ்நாட்டை ஆளக்கூடாது' என்பதுதான். இந்த விமர்சனம் குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவிட்ட நிலையில் இன்று கல்லுரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், 'தமிழன் என்பது தகுதி அல்ல விலாசம், எங்கிருந்து வந்து தமிழகத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்தாலும் தமிழரே' என்று ரஜினிக்கு மறைமுக ஆதரவு தரும் வகையில் பேசியுள்ளார்.

மேலும் இதே நிகழ்ச்சியில் கமல் மேலும் கூறியபோது, 'பணத்தை அதிகமாக வைத்திருப்பவன் முட்டாள்; பணம் என்பது எப்போதும் புழக்கத்திலேயே இருக்க வேண்டும். மற்றவர்களைப் போல் தொழிலை விட்டுவிட்டு கஜானாவை சுரண்டுபவன் நானல்ல. நான் சம்பாதிப்பதில் எனக்கு போக மற்றவர்களுக்கும் கொடுப்பேன்

நோட்டாவுக்கு யாரும் ஓட்டளிக்க வேண்டாம். யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்து வாக்க்களிக்க வேண்டும் நாங்கள் சிறந்தவர்களாக இருக்க கடமையைச் செய்வோம். வேட்டி கட்டி கோஷமிட்டு உண்டியல் குலுக்குவதல்ல அரசியல்; அது நாமே ஏற்படுத்திக்கொள்வது. அரசியலில் யாரும் சேவை செய்ய வேண்டாம்; தேவையான சம்பளம் தரப்படுகிறது; அதற்கு மேல் எடுத்தால்தான் திருட்டு

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.