close
Choose your channels

மகனை பார்த்து பெருமைப்படும் அருண்விஜய்: வைரல் புகைப்படம்!

Saturday, July 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா தயாரித்து வரும் திரைப்படம் ஒன்றில் அருண் விஜய் மகன் அர்னவ் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட பணிகள் துவங்கியுள்ளது.

முதலாவதாக அருண் விஜய்யின் மகன் அர்னவ், இந்த படத்தின் டப்பிங் பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் டப்பிங் செய்வதை அருகில் இருந்து பார்த்த அருண் விஜய் தனக்கு மிகவும் பெருமையாக இருந்ததாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அருண்விஜய் மகன் அர்னவ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும், ஒரு சிறுவனுக்கும் அவர் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாச பந்தம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜயகுமார் மற்றும் அருண்விஜய் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதால் விஜயகுமார் குடும்பத்தின் மூன்று தலைமுறை நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் சரத் சண்முகம் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.