close
Choose your channels

ஆர்யாவின் 'கேப்டன்' சென்சார் தகவல்: ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

Sunday, August 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான ‘கேப்டன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 8 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடும் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ‘கேப்டன்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஒரு மணிநேரம் 56 நிமிடங்கள் அதாவது 116 நிமிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரும் திரைப்படங்கள் இரண்டரை மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ரன்னிங் டைம் இருக்கும் நிலையில் இந்தப் படம் ஹாலிவுட் பட பாணியில் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்த படம் மீண்டும் ஆர்யா- சக்தி சௌந்தரராஜன் கூட்டணியில் உருவாகும் வெற்றிப் படமாகக் கருதப்படுகிறது.

ஆர்யா ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.