close
Choose your channels

'குக் வித் கோமாளி' அஸ்வின் குறித்து உணர்வுபூர்வ பதிவிட்ட ஷகிலா மகள்: வைரல் புகைப்படம்!

Wednesday, March 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்’கள், கோமாளிகள் செய்யும் சேட்டைகள், ரொமான்ஸ்கள், காமெடிகள் நான்ஸ்டாப்பாக இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் போட்டியாளர்களின் ஒருவரான ஷகிலாவின் இமேஜே முற்றிலும் மாறி விட்டது என்பதும் தற்போது அவரை அனைவரும் ஷகிலா அம்மா என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ஷகிலா தனது மகள் மில்லா என்பவரை அழைத்து வந்த நிலையில் அதே நிகழ்ச்சியில் ’குக் வித் கோமாளி அஸ்வினும் வந்திருந்தார். அஸ்வினுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ஷகிலா மகள் மில்லா, ‘அஸ்வின், என்னுடைய இன்னொரு அம்மாவுக்கு பிறந்த சகோதரர்’ என்று உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவும் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.