close
Choose your channels

ரஜினி படத்தை பயன்படுத்தி மீம் போட்ட ஆஸ்திரேலியா போலீஸ்

Saturday, February 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகர் என்பது அவரது படத்தின் உலகளாவிய வசூலை வைத்து முடிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் ரசிகர்கள் மட்டுமின்றி தற்போது ஆஸ்திரேலியா காவல்துறையும் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு விழிப்புணர்வு மீம் ஒன்றை தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருவதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து திடீர் வாகன சோதனை நடத்தியதில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பலர் பிடிபட்டனர். அதில் ஒருவர் அளவுக்கதிகமான போதையால் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா காவல்துறை ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் ஒரு காட்சியைப் வைத்து மீம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த மீமில் போதையில் வாகனம் ஓட்டி பிடிபட்டு கோமா நிலைக்கு சென்ற நபரின் உடலில் 0.341% ஆல்கஹால் இருப்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 2.0 படத்தில் வரும் ‘This is beyond Science’ என்ற வசனமும் அந்த மீமில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மீமை ரஜினி ரசிகர்கள் அதிகளவு ஷேர் செய்ததால் ஆஸ்திரேலிய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது. மேலும் ரஜினியை வைத்து மீம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆஸ்திரேலியா காவல்துறையினர்களுக்கு ரஜினி ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.