close
Choose your channels

'பேச்சிலர்' திவ்யபாரதியின் அடுத்த படத்திற்கு விஜய் பட டைட்டில்!

Sunday, July 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்யபாரதியின் அடுத்த பட டைட்டிலாக விஜய்யின் சூப்பர்ஹிட் பட டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கதிர் ஹீரோவாகவும், திவ்யபாரதி ஹீரோயினாகவும் நடித்து இருக்கும் திரைப்படத்தை ஷிவ் மோகா என்பவர் இயக்கி வந்தார். இவர் ஏற்கனவே ஜீரோ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த இந்த படத்திற்கு ’லவ்டுடே’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் கடந்த 1997அம் ஆண்டு விஜய், சுவலட்சுமி நடிப்பில் உருவான சூப்பர்ஹிட் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.