close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படாத காட்சிகள்: அனிதாவின் வைரல் வீடியோ!

Thursday, February 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரம் நடந்த சம்பவங்களில் ஒரு மணி நேரம் மட்டுமே தொகுத்து வழங்கியதை நாம் பார்த்தோம். இந்த நிலையில் மீதி நேரங்களில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகள் என்னென்ன? சம்பவங்கள் என்னென்ன? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அனிதா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியபோது ’பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேக்கப் சாங் குறித்து கூறிய அனிதா ’நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கூட வேக்கப் சாங் ஒளிபரப்புவார்கள் என்றும் சில சமயம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து வந்தவுடன் வேக்கப் சாங் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனமழை நேரத்தில் எங்களை இடமாற்றம் செய்யும் போது நாங்கள் மிகவே பயந்தோம் என்றும் 2015ஆம் ஆண்டு வெள்ளம் போன்று இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது என்றும் ஆனால் அந்த அச்சத்தை பிக்பாஸ் நீக்கினார் என்றும் கூறினார்.

மேலும் பிக்பாஸ் என்பது ஸ்கிரிப்ட் என்பது சுத்தமான பொய் என்றும் நாங்கள் சிரித்துக்கொண்டும் அழுது கொண்டும் இருந்ததெல்லாம் உண்மைதான் என்றும் கூறினார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நான் அனைத்து போட்டியாளர்களுடனும் மனம்விட்டுப் பேசினேன் என்றும் குறிப்பாக ஆரியிடம் நான் எனது குடும்பத்தை பற்றி பல விஷயங்களை தெரிவித்து உள்ளேன் என்றும், அதே போல அவரும் அவரது குடும்பத்தைப் பற்றி தெரிவித்து இருந்தார் என்று கூறினார்.

மேலும் நான் மிகவும் எதிர்பார்த்தது ப்ரீஸ் டாஸ்க் என்றும் அந்த டாஸ்க்கிற்காக எனது கணவர் பிரபா 16 நாட்கள் தனிமையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார் என்றும் ஆனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த காலத்தின் போது நான் எவிக்ட் ஆகிவிட்டதால் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்றும் கூறினார்., ஆனால் அதே நேரத்தில் நான் எவிக்ட் ஆகாமல் இருந்திருந்தால் என் அப்பாவை கடைசியாக பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்பேன்’ என்றும் அனிதா தெரிவித்தார். அனிதாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.