close
Choose your channels

மிட்வீக் எவிக்சனில் வெளியேறிய போட்டியாளர் இவரா?

Friday, January 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் முடிவடையும் நிலையில் இந்த சீசனில் சில புதுமையான அம்சங்களை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக கடைசி வாரத்தில் பணப்பெட்டி மட்டுமே அறிமுகம் செய்யப்படும் நிலையில் இந்த சீசனில் பணமூட்டை மற்றும் பணப்பெட்டி ஆகிய இரண்டும் அறிமுகம் செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு நான்கு போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில் திடீரென மிட்வீக் எவிக்சனில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருப்பதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

விக்ரமன், ஷிவின், மைனா மற்றும் அசீம் ஆகிய நால்வரில் ஒருவர் மிட்வீக் எவிக்சன் செய்யப்படுவதாக அறிவித்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மைனா வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகிய மூவரில் ஒருவருக்கு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.