close
Choose your channels

ஓமனக்குட்டி கெட்டப்பில் பிக்பாஸ் ஷிவானி: வைரல் வீடியோ

Saturday, June 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் என்பதும் அவர் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்தார் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் பாலாஜியுடன் மட்டுமே அவர் நெருங்கி பழகினார் என்பதும் மற்ற போட்டியாளர்களிடம் இருந்து விலகி இருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. கடைசி நேரத்தில் ஒரு டாஸ்க்கில் சிங்கப்பெண்ணாக வெளியேறினார் என்பது மட்டுமே அவரது ஆர்மியினர்களுக்கு ஒரு ஆறுதலான தகவல் ஆகும்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஷிவானிக்கு திரையுலகிலும் சின்னத்திரை உலகிலும் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகியும் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது. இருப்பினும் அவர் தனது விடா முயற்சியை இன்ஸ்டாகிராமில் செய்து வருகிறார்.

கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர் தனது ஃபாலோயர்களை மட்டும் இப்போதைக்கு திருப்தி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் அவர் கேரளா ஸ்டைலில் ஓமனக்குட்டி கெட்டப்பில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் வழக்கம் போல் அவரது ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.