close
Choose your channels

புடிச்ச விஷயத்தை யோசிக்காமல் செய்யலாம்.. மைனா நந்தினி யோசிக்காம செஞ்சது இதுதான்: வைரல் வீடியோ..!

Monday, March 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பிடிச்ச விஷயத்தை யோசிக்காமல் செய்யலாம்’ என்று கூறியுள்ள பிக் பாஸ் மைனா நந்தினி யோசிக்காமல் செய்த செயல் குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமானவர் மைனா என்பதும் குறிப்பாக ’சரவணன் மீனாட்’சி என்ற தொடர் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு 104 நாள் தாக்கு பிடித்து அவர் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 7 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள மைனா அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் மிகப்பெரிய அளவில் வைரலாகும். இந்த நிலையில் மைனாவின் யூடியூப் சேனலில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர் ஆனதை அடுத்து அதனை கொண்டாடும் வகையில் சாலை ஓரத்தில் தங்கும் பொது மக்களுக்கு உணவுகளை அளித்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

‘புடிச்ச விஷயத்தை யோசிக்காமல் செய்யலாம்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ள மைனா தனது சப்ஸ்கிரைபர்களாகிய செல்ல குட்டிகளுக்காக இது’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.