close
Choose your channels

விஜய் ஆண்டனியின் மகள் இவ்வளவு பெரிய பெண்ணா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Monday, March 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய பெண்ணா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் திரை உலகின் நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருபவர் விஜய் ஆண்டனி என்பது தெரிந்தது. விஜய் நடித்த ’சுக்ரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் அதன் பிறகு பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார் என்பதும் அதேபோல் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ’நான்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி அதன் பின்னர் ’சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’ ’பிச்சைக்காரன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ’பிச்சைக்காரன் 2’ ’தமிழரசன்’ ’அக்னி சிறகுகள்’ என பல படங்களை கையில் வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி கடந்த 2006 ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பாத்திமா விஜய் ஆண்டனி தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் விஜய் ஆண்டனிக்கு இவ்வளவு பெரிய மகளா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.