close
Choose your channels

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

Saturday, November 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் 3 பேர்கள் குறைவான வாக்குகள் பெற்று இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த தகவலை பார்த்தோம். அவர்கள் இமான் அண்ணாச்சி, பாவனி மற்றும் மதுமிதா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்துள்ள தகவலின்படி குறைந்த வாக்குகளின் அடிப்படையில் மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜெர்மனியிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் ஆர்வத்துடன் வந்த மதுமிதா நாற்பதே நாட்களில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது அவரது ஆர்மிகளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இந்த 40 நாட்களிலும் அவரது கொஞ்சுதமிழ் அனைவரையும் மகிழ்வித்தது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.