close
Choose your channels

உள்ளே வெளியே டாஸ்க், பாகற்காய் ஜூஸ்: மீண்டும் மோதும் நிரூப்-வருண்!

Friday, November 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 46 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் ‘உள்ளே வெளியே’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகின்றன

இதில் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பவுலில் உள்ள தண்ணீருக்குள் பந்துகளை போட வேண்டும் என்றும் அவ்வாறு போடவில்லை என்றால் 8 கிளாஸ் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றும் டாஸ்க் கொடுக்கபப்டுகிறது.

இந்த டாஸ்க்கில் கலந்து கொண்ட ஒரு சிலர் சரியாக பந்தை போட்டும், பலரும் மிஸ் செய்தும் உள்ளனர். இதன் பின்னர் வழக்கம்போல் போட்டியாளர்களுக்கு இடையே இந்த டாஸ்க் குறித்தும் சண்டை சச்சரவுகள் நடைபெறுகிறது

வழக்கம் போல நிரூப் மற்றும் வருண் மோதிக் கொள்கின்றனர் என்பதும் அதேபோல் பிரியங்கா மற்றும் நிரூப் மோதிக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தாமரையும் ஆவேசமாக பேசும் காட்சிகளும் புரமோ வீடியோவில் உள்ளன மொத்தத்தில் இந்த டாஸ்க்கும், பொம்மை டாஸ்க் போல் சண்டை சச்சரவுடன் தான் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.