close
Choose your channels

சேரனுக்கு ரகசிய அறை, கவினுக்கு ஒரு பப்ளிக் அறை: கமல்ஹாசனின் சொல்லாட்டம்

Saturday, September 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சனி, ஞாயிறு தினங்களிலும் கமல் தோன்றி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வரும் நிலையில் இன்றும் அவர் தனது வழக்கமான சொல்லாடலால் பார்வையாளர்களை கவர்கிறார்.

இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர்களுடன் அமர்ந்திருக்கும் கமல்ஹாசன், ‘பிக்பாஸ் வீட்டில் உள்ள உங்களுக்கு கிடைத்திருக்கும் புகழும் விமர்சனமும் உடனுக்குடன் போய் சேராது. அன்றாடம் அனுபவித்து கொண்டிருப்பவர்கள் அவர்களது குடும்பத்தார்கள் தான். நீங்க உங்க குடும்பத்தார்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தீர்கள். சேரனுக்கு ரகசிய அறையும் கவினுக்கு பப்ளிக்கா ஒரு அறையும் கிடைத்தது’ என்று கூறியுள்ளார். இரண்டும் இரண்டு விதமான அறைகள் என்று கமல் கூறியபோது, அந்த அறையால் தனக்கு எல்லாம் புரிந்ததாக கவின் கூறினார்.

இன்றைய நிகழ்ச்சியிலும் போட்டியாளர்கள் தங்கள் உறவினர்களை கமல்ஹாசனுன் டிவியில் பார்க்கவிருப்பதால் இன்றைய நிகழ்ச்சியும் நெகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.