close
Choose your channels

கஸ்தூரியை பங்கமாய் கலாய்த்து வரும் கவின் கூட்டணி! 

Friday, August 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் வைல் கார்ட் எண்ட்ரி ஆக வந்த கஸ்தூரி நிகழ்ச்சியை மேலும் பரபரப்பாகவும், சுவராசியமாகவும் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை எந்தவிதமான சுவாரஸ்யமும் இணையவில்லை என்பது மட்டுமின்றி சக போட்டியாளர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று நடந்த டாஸ்க் ஒன்றில் நன்றாக சமைப்பது ஆண்களா? பெண்களா? என்ற விவாதத்தில் கஸ்தூரியை வைத்து சாண்டியும் கவினும் பங்கமாய் கலாய்த்ததை கஸ்தூரி ரசிக்க வில்லை என்றாலும் பெண் போட்டியாளர்களும் சேர்த்து சிரித்து கஸ்தூரியை எரிச்சலூட்டினர். ஏற்கனவே கஸ்தூரியை காக்கா என்று விமர்சனம் செய்து கலாய்த்த ஆண்கள் அணி, நேற்றைய நிகழ்ச்சியில் கஸ்தூரியின் சர்க்கரை பொங்கலை கலாய்த்தது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது

மேலும் கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துவராத நிலையில் கஸ்துரியை கலாய்க்கும் விஷயத்தில் மட்டும் வனிதா, ஆண்கள் கூட்டணியுடன் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கஸ்தூரிக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு வந்த கஸ்தூரி இதுவரை அசிங்கப்பட்டே வருகிறார். டுவிட்டரில் எகத்தாளமாக கேள்வி கேட்பவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் கஸ்தூரி, பிக்பாஸ் வீட்டில் பங்கமாய் கலைக்கப்பட்டு வருவது பார்ப்பதற்கு கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கின்றது. கஸ்தூரி விரைவில் பொங்குவாரா? அல்லது அவரது பொங்கல் போல் தான் கடைசி வரை இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.