close
Choose your channels

மீண்டும் மதுமிதாவை பிரபலமாக்கும் அபிராமி-சாக்சி

Monday, July 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, கூட்டத்தோடு கூட்டமாக பிரபலமாகாத ஒரு போட்டியாளராக முதல் வாரத்தில் இருந்தார். ஆனால் அவர் கூறிய 'தமிழ்ப்பொண்ணு' என்ற ஒரே ஒரு வார்த்தையை குத்திக்காட்டி அவரை வனிதா குரூப்பில் உள்ள அபிராமி, சாக்சி, ஷெரின் ஆகியோர் கார்னர் செய்தனர். இவர்களுடன் பிளேபாயான கவினும் சேர்ந்து கொண்டு மதுமிதாவை எதிர்த்தார்.

ஆனால் பிக்பாஸ் வீடே மதுமிதாவை எதிர்த்த போதிலும், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் மதுமிதாவை நாமினேஷன் செய்தபோதிலும் மக்கள் அவரைத்தான் முதலில் காப்பாற்றினார்கள். மதுமிதாவுக்கு எதிர்ப்பு வலுக்க வலுக்கத்தான் அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

இதனை புரிந்து கொள்ளாத அபிராமியும் சாக்சியும் இன்று மீண்டும் மதுமிதா குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். வனிதா குரூப்பிடம் சண்டை போட்டு வந்த அபிராமிக்கு ஆறுதல் கூற முயன்ற மதுமிதா குறித்து சாக்சியிடம் அபிராமி பேசுவது பார்வையாளர்களுக்கு எரிச்சலைத்தான் தரும். மதுமிதாவை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு அவரை மேலும் பிரபலமாக்கும் வேலையைத்தான் அபிராமியும் சாக்சியும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.