close
Choose your channels

நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? கடந்த வாரம் தப்பித்தவர் இந்த வாரம் வெளியேறுவாரா?

Monday, November 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்படுவார்கள் என்பதும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் அந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே.

இதுவரை சாந்தி, அசல் கோலார், மற்றும் ஷெரினா ஆகிய மூவர் எலிமினேஷன்  செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

இந்த வாரத்தில் ஆயிஷா, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, அசீம், விக்ரமன் ஆகிய 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆயிஷா நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்றும், தனலட்சுமியிடம் பேசவே பயமாக உள்ளது என்றும், ராம் இன்னும் வீட்டில் உள்ளவர்களுடன் இன்வால்வ் ஆகவில்லை என்றும், அசீம் நக்கலாகவும் திமிறாகவும் பேசுகிறார் என்றும், மகேஸ்வரி ரொம்ப ஈஸியா ஒருவரை ட்ரிக்கர் செய்கிறார் என்றும், வேலைசெய்தாலும் வேலை செய்யவில்லை என்று குறை சொல்கிறார் விக்ரமன் என்றும் காரணங்களாக கூறப்படுகிறது.

இதில் கடந்த வாரம் நூலிழையில் தப்பிய ஆயிஷா, இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவாரா? அல்லது வேறு யாரேனும் குறைந்த வாக்குகள் பெற்று எலிமினேஷன் செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.