close
Choose your channels

சாகிறதா இருந்தாலும் சண்டபோட்டுட்டு சாகணும்: கார்த்தியின் 'கைதி' டிரைலர்

Monday, October 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒருபக்கம் ரூ.800 கோடி சரக்கை போலீஸிடம் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் கும்பல், இன்னொரு பக்கம் அந்த சரக்கை கடத்தும் கைதி கார்த்தி, இவர்களுக்கு நடுவே போலீஸ் என மும்முனை போராட்டத்தின் கதை தான் இந்த ‘கைதி’ படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிகிறது.

கார்த்தியிடம் நரேன் ‘உனக்கு மட்டும்தான் குடும்பம் இருக்கா? போலீஸ்காரனுக்கு குடும்பம் இல்லையா? என்ற வசனமும், ‘போலீஸ்காரன் குடும்பத்தை கவர்மெண்ட் பாத்துக்கும், உன் குடும்பத்தை எவன் பாத்துக்குவான் என கார்த்தியிடம் தீனா பேசும் வசனங்களும் இந்த டிரைலரின் ஹைலைட்.

கைதியாக இருந்தாலும் போலீஸ் மீது மனிதாபிமானம் காட்டும் கார்த்தி, கையில் விலங்குடன் தப்பிக்கும் கைதி கார்த்தியின் ஆவேசமான ஆக்சன் காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றது. ’பத்து வருசம் உள்ளே இருந்தது மட்டும்தான் உங்களுக்கு தெரியும், உள்ளே போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிகிட்டு இருந்தேன்னு உங்களுக்கு தெரியாது’ என்று கார்த்தி, நரேனிடம் கூறுவதில் இருந்து கார்த்தியின் பின்னணி குறித்த சஸ்பென்ஸை எதிர்பார்க்க வைக்கின்றது.

சாம் சிஎஸ் அதிரடி பின்னண் இசை, அன்பறிவ் ஆக்சன் காட்சிகள், சத்யன் சூரியனின் அசத்தலான கேமிரா கோணங்கள், ஆகியவை இந்த படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கும் என தெரிகிறது.

மொத்தத்தில் லோகேஷ் கனகராஜின் டீம் கார்த்தியின் ரசிகர்களுக்கு ஒரு சரியான தீபாவளி விருந்தை படைக்கவுள்ளது என்பது மட்டும் இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.