close
Choose your channels

பிரபுதேவாவின் அடுத்த படத்திற்கு ஆச்சரியமான டைட்டில்

Monday, October 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், இயக்குனர் , நடன இயக்குனர் பிரபுதேவா நடிப்பில் இந்த ஆண்டு ‘சார்லி சாப்ளின் 2’, ‘தேவி 2’, ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் ’யங் மங் சங்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘தபாங் 3’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தனஞ்செயன் தயாரிப்பில் விஎஸ் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது இந்த படத்திற்கு ‘ஊமை விழிகள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டில் கடந்த 1986ஆம் ஆண்டு விஜயகாந்த், கார்த்திக், நடிப்பில் ஆபாவாணன் இயக்கத்தில் ஒரு படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவும், காஸிப் இசையும், பென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர். இந்த படமும் ஆபாவாணனின் ‘ஊமை விழிகள்’ போல் வெற்றியடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.