close
Choose your channels

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பாலிவுட் பிரபலமா?

Saturday, December 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. ஏற்கனவே ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது என்பதும் அதில் கேஎஸ் ரவிக்குமார், தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், வெங்கட்பிரபு உள்பட ஒரு சில இயக்குநர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளது பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ’ஷமிதாப்’ ஸ்ரீதேவி, அஜித் நடித்த ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ உள்பட ஒருசில வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பால்கி தற்போது துல்கர் சல்மான் நடித்து வரும் பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரஜினியை சந்தித்த இயக்குனர் பால்கி கூறிய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தை பால்கி இயக்க வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ரஜினிகாந்த் அடுத்த படத்தை பால்கி இயக்குவது உறுதி செய்யப்பட்டால் இந்த படத்திற்கு இயக்குனர் பால்கியின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜா தான் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் உறுதி செய்யப்பட்டால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் - இந்தியா படமாக உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.