close
Choose your channels

பிரபல பெண் திரைப்பட தயாரிப்பாளர் கைது

Sunday, December 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அக்சயகுமார் நடித்த 'பேட்மேன்' உள்பட பல திரைப்படங்களை தயாரித்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் பிரர்ண அரோனா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ரூ.16 கோடி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரர்ணா அரோனாவிடம் இருந்து பல பாஸ்போர்ட்டுக்களும் பான்கார்டுகளும் கைப்பற்றப்பட்டதாக மும்பை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை 10ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை செய்யவும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ரஸ்டம், டாய்லட், பேட்மேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த பிரர்ணா, ஒரே படத்தின் உரிமைகளை பலருக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.