close
Choose your channels

நடன இயக்குனரை மணக்கும் 'பில்லா பாண்டி' நாயகி

Tuesday, December 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவர் சாந்தினி தமிழரசன். இவர் ஏற்கனவே 'கவண்', 'கட்டாவை காணோம்', 'வில் அம்பு' உள்பட் பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் நடன இயக்குனர் நந்தாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் நந்தா-சாந்தினி திருமணம் நடைபெறவுள்ளது.

நாளை அதாவது டிசம்பர் 12ஆம் தேதி திருப்பதியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணமும், அதன்பின்னர் டிசம்பர் 16ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக இருவீட்டார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குனர் நந்தாவை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு பின்னரும் நல்ல வேடங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சாந்தினி தமிழரசன் கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.