பொள்ளாச்சி விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறிய எஸ்பி மீது அதிரடி நடவடிக்கை!


Send us your feedback to audioarticles@vaarta.com


பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் துணிச்சலாக இந்த விவகாரம் குறித்து புகார் கூறியது ஒரே ஒரு பெண் மட்டுமே. அதன்பின்னர் தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாலியல் புகார் கொடுக்கும் பெண்களின் பெயர்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் மீறி கோவை எஸ்பி பாண்டியராஜன், செய்தியாளர் பேட்டியின்போது புகார் அளித்த பெண்ணின் பெயரை கூறினார். அதுமட்டுமின்றி அந்த பெண் படிக்கும் கல்லூரி உள்பட பல விவரங்கள் இணையத்தில் கசிந்தன.
கோவை எஸ்பியின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர், கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் பாலியல் கொடுமையில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.