close
Choose your channels

காமெடி நடிகர் லோகேஷ் உடல் நிலை குறித்த தகவல் வதந்தியா? உண்மையா?

Tuesday, March 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்த நடிகர் லோகேஷ் தொலைக்காட்சியிலும் புகழ் பெற்றவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் லோகேஷ் கை, கால் செயல் இழந்து போய் விட்டதாகவும் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு பண உதவி தேவை என்றும் நெட்டிசன்கள் பண உதவியை லட்சக்கணக்கில் அளித்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்தபோது அவருடைய நண்பர்கள் இது குறித்து தெரிவித்த போது ’லோகேஷ் உடல் நிலை பாதிக்கப்பட்டது என்பது உண்மைதான் என்றும், ஆனால் கை கால் செயலிழப்பு என்று வந்த செய்தியில் சிறிதும் உண்மை இல்லை என்றும் அவர் தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் அவருக்கு கை கால்கள் செயலிழந்தது போன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு பண உதவி செய்ததாக வந்த தகவலிலும் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து லோகேஷ் தற்போது நலமாக இருப்பது தெரிய வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.