close
Choose your channels

குக் வித் கோமாளி தொகுப்பாளர்கள்.. ரக்சன், மணிமேகலைக்கு இவ்வளவு சம்பளமா?

Thursday, March 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வைத்து கோமாளி என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்து வரும் மே மாதம் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ள நிலையில் ஏற்கனவே இரண்டு புரமோ வீடியோ வெளியாகியது என்பதை பார்த்தோம்.

நேற்று வெளியான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ரக்சன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் ரக்சன் மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கிய நிலையில் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை ரக்சன் மட்டுமே தனித்து தொகுத்து வழங்கினார். நான்காவது சீசனில் ஒரு சில எபிசோடுகளில் மட்டும் மணிமேகலை இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசனின் தொகுப்பாளராக வரும் ரக்சனுக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் கசிந்து உள்ளது. இந்த தகவலின் படி ரக்சனுக்கு இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. அதேபோல் மணிமேகலைக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் இருக்கலாம் என்றும் தெரிகிறது. சம்பள விவரம் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இருவருக்கும் கணிசமான சம்பளம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் இந்த சீசனில் கலந்து கொள்ளும் குக்குகள் மற்றும் கோமாளிகளுக்கும் கடந்த சீசனை விட அதிக சம்பளம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக சேனல் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.