close
Choose your channels

'தர்பார்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்!

Friday, January 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகியிருக்கும் ’தர்பார்’ திரைப்படம் இம்மாதம் 9ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த படத்தின் புரமோஷன் விமானம் உள்பட பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’தர்பார்’ படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 159 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இரண்டு மணிநேரம் 39 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும்

சென்சார் பணி முடிந்து விட்ட நிலையில் இந்த படம் வரும் 9ஆம் தேதி ரிலீசாவது நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.