close
Choose your channels

அடங்க மாட்டாரா வார்னர்? பாகுபலியை அடுத்து முக்காபுல்லா...

Sunday, May 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வீட்டில் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வேடிக்கையான, வினோதமான, நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு வருவது போல் ஒருசில கிரிக்கெட் வீரர்களும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கமலஹாசன் நடித்த ’தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற ’இஞ்சி இடுப்பழகி’, பாடலுக்கும், 'ஜெண்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒட்டகத்தை கட்டிக்கோ’ என்ற பாடலுக்கும் தனது மனைவி, குழந்தையுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலானது. மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ’பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்திற்கு வார்னர் நடித்த வீடியோவும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது பிரபுதேவா நடித்த ‘காதலன்’ படத்தில் இடம்பெற்ற ‘முக்காலா... முக்காபுல்லா.... பாடலுக்கு மனைவி, குழந்தையுடன் வார்னர் நடனமாடியுள்ளார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதை சொல்லவும் வேண்டுமா? இந்த வீடியோக்களை பார்த்து வரும் நெட்டிசன்கள் ‘வார்னர் அடங்க மாட்டார் போலிருக்கின்றதே’ என்று கமெண்ட் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos