close
Choose your channels

முதல் படம் வெற்றியால் 'மாஸ்டர்' தயாரிப்பாளரிடம் இருந்து வந்த அழைப்பு: ஆச்சரியத்தில் கோலிவுட்!

Thursday, December 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இளைஞர்கள் அதிக அளவில் வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவியாளர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கிய ’ரைட்டர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஊடகங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கிய முதல் படத்தின் வெற்றியால் அவருக்கு தற்போது ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் லலித் அவர்களின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை பிராங்க்ளின் ஜேக்கப் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதல் பட வெற்றியால் மாஸ்டர் தயாரிப்பாளரின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றதை அடுத்து கோலிவுட் திரையுலகம் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.