close
Choose your channels

அரசியல் கட்சியின் தெருமுனை கூட்டத்தில் பேசிய நடிகர் தனுஷ்

Tuesday, January 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் முதன்முதலாக அண்ணன் - தம்பி என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் 'கொடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக அரசியல் கூட்டம் போன்ற செட் அமைக்கப்பட்டு அதில் தனுஷ் அரசியல் வசனம் பேசுவது போன்ற காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த காட்சியின் புகைப்படங்கள் தற்போது சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அரசியல் கட்சி ஒன்றின் தெருமுனைக்கூட்டத்தில் நடிகர் தனுஷ் ஆவேசமாக அரசியல் வசனம் பேசியதை பார்த்து படக்குழுவினர் அசந்து போனதாக கூறப்படுகிறது.

இருவேடங்களில் தனுஷ் நடிக்கும் இந்த படத்தில் த்ரிஷா மற்றும் ஷாமிலி நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.