close
Choose your channels

விஜய்சேதுபதி படத்திற்கு விஜய் எதிர்ப்பு

Tuesday, January 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சூது கவ்வும்' இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன் மற்றும் சமுத்திரகனி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் 'காதலும் கடந்துபோகும்' இந்த படத்தின் விளம்பரங்களில் படத்தின் தலைப்பை சுருக்கி 'கககபோ' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுருக்கமான தலைப்புக்கு புதுமுக இயக்குனர் விஜய் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விஜய் ஏற்கனவே 'கககபோ' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி முடித்து ரிலீஸுக்கு காத்திருப்பதாகவும், இந்த நேரத்தில் விஜய்சேதுபதி படத்துக்கும் அதே பெயர் வைத்து விளம்பரப்படுத்தப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் விஜய் பத்திரிகையாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: "அன்பு பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம், நான் 'க க க போ' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். இதில் பல்வேறு முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்து, திரைப்படம் முடிந்து தற்பொழுது வெளியீட்டிற்கு தயார்நிலையில் உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருக்கும் `காதலும் கடந்து போகும்` திரைப்படத்திற்கும் க க போ எனப் பெயரிட்டு விளம்பரம் செய்கிறார்கள், இது எங்கள் திரைப்பட தலைப்பிற்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே பத்திரிகை நண்பர்கள் க க போ தலைப்பு எங்களுக்கே சொந்தம் என்பதையும், இந்த தலைப்பில் குழப்பம் வராமல் செய்திகளை வெளியிடுமாறும் அன்போடு கேட்டுகொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.