close
Choose your channels

தனுஷ் பாட்டு பாடும் அழகை ஆச்சரியமாக பார்க்கும் பிரபல பாடகி: வீடியோ வைரல்!

Friday, November 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் தேசிய விருது பெற்ற மிகச்சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச் சிறந்த பாடகர் என்பதும் அவர் தான் நடிக்கும் படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக அவர் பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடல் உலக அளவில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் பாட்டு பாடும் அழகை பிரபல பாடகி ஒருவர் அருகில் இருந்து ஆச்சரியத்துடன் பார்க்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரெக்கார்டிங் தியேட்டர் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது திடீரென சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஸ்வேதா மேனன் முதலில் பாரதிராஜா இயக்கிய ’அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தில் இடம்பெற்ற ’காதல் ஓவியம்’ என்ற பாட்டை பாடுகிறார்.

அவர் பாடிக் கொண்டிருக்கும் போது இடையில் தனுஷ் அந்த பாடலை தொடர்கிறார். கனகச்சிதமாக தனுஷ் பாடுவதை அருகிலிருந்த ஸ்வேதா மேனன் ஆச்சரியத்துடன் பார்க்கும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.

இந்த நிலையில் தனுஷ் தற்போது ‘வாத்தி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. மேலும் அவர் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.