close
Choose your channels

துருவ் விக்ரமின் 'ஆதித்யவர்மா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, October 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இதனையடுத்து வேறொரு இயக்குனரின் இயக்கத்தில் ’ஆதித்யவர்மா’ என்ற பெயரில் மீண்டும் அதே படம் தயாரானது.

கிரிசாயா இயக்கத்தில் உருவான ’ஆதித்யவர்மா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதனையடுத்து தற்போது இந்த படம் நவம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த படம் ராதன் இசையில் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கனவே 'ஆதித்ய வர்மா' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.