close
Choose your channels

விஜய்யின் 'பிகில்' படத்தின் மாஸ் அப்டேட்!

Sunday, October 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து முடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் ஏற்கனவே கூறியிருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் தெலுங்கு டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு டைட்டிலாக ‘விசில்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜய்யின் தெலுங்கு மாநில ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.